ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வருவதால், அடையாள அட்டை விநியோகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 23, 24, 26 ஆகிய திகதிகளில் ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு மாத்திரம் நாளை விநியோகிக்கப்படும்.
மார்ச் 31 (செவ்வாய்) முதல் வழமை போன்று ஒருநாள் சேவை தடையின்றி இடம்பெறும்.
தலைமை மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவைகள் ஏப்ரல் 06 முதல் ஆரம்பமாகும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் தகவல் உறுதிப்படுத்தல் சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.