சித்திரை புத்தாண்டு நிகழ்வுடன்
களம் இறங்குகிறது நல உதயம்

அணித் தலைவி திருமதி ஜெயனிகவிதா தகவல்

புதிய அலை கலை வட்டத்தின் சமூக சேவைகளின் குரலான நல உதயம் அமைப்பு அன்மையில் ஸ்தாபகர் ராதாமேத்தாவால் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இதன்பணிகள் சித்திரைப் புத்தாண்டு முதல் ஆரம்பமாகின்றன. முதற்பணியாக மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமான விளையாட்டுப் போட்டி ஒன்றையும்
சமூகப் பணியில் நீண்ட காலமாக பங்காற்றி வரும் சேவையாளர்கள் பத்துபேருக்கு கெளரவம் வழங்கும் நிகழ்வொன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என மேற்படி அமைப்பின் தலைவி திருமதி ஜெயனிகவிதா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சமூக சேவை யாளர்களுக்கான இந்தக் கெளரவம் *நல உதயம் விருது”என்ற பெயரில் பிரதி ஆண்டுகள் தோறும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இம்முறை வத்தளை பிரதேசத்தை உள்ளடக்கியதாக எதிர்வரும் 26.04.2026 இல் நடைபெற வுள்ளது. மேலும் அமைப்பின் பணிகளை திட்டமிடப் பட்ட ஒழுங்கில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகளும் மேற் கொள்ளப்படுகின்றன.

எனவே சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டோர் அமைப்பில் இணைந்து செயல்பட முடியும் விரும்புவோர் 075 4880172என்ற எமது வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *