தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்பட்டு வருவதாகவும், நாளை காலைக்குள் முறைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
2023 ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வாகன உரிமையாளர் மாற்றம் செய்தவர்கள், புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான மேம்படுத்தல்கள் தற்போது நடைபெறுகின்றன.
QR உடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் மாறியிருந்தால் அல்லது துண்டிக்கப்பட்டிருந்தால், தொலைபேசி நிறுவனங்கள் வழங்கும் புதிய தரவுகள் முறைமையில் இணைக்கப்பட்டு வருகின்றன.
போலி இணைய இணைப்புகளைத் (Fake Links) தவிர்க்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு 1919 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.