கொழும்பு    ஆனந்தாக் கல்லூரியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட,  “சந்தேஷய” விருது வழங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்

 

ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும்.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து நாம் அவதானமாக இருத்தல் வேண்டும்.

எமக்குக் கிடைக்கும் தகவல்களின் மூலங்கள் குறித்த நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதுடன், அவற்றின் உண்மைத்தன்மையைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வது அவசியமாகும்.

அதற்காக டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் ஊடக எழுத்தறிவு குறித்த விழிப்புணர்வு அத்தியாவசியமானது என நாம் கருதுகிறோம்.

அதனாலேயே, இத்தகைய பாடங்களையும் எண்ணக்கருக்களையும் கற்றுக்கொள்வதற்கு எமது மாணவர் சந்ததியினருக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும்.”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *