13 கோடி ரூபாய் பெறுமதியான 454 ஐபோன்கள் பறிமுதல்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 454 ஐபோன்களை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஐபோன்களின் சந்தைப் பெறுமதி சுமார் 13 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 3 வெளிநாட்டவர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *