இலங்கை நிலத்தடி நீர் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரம் மாத்தறை மாவட்டம் பிட்டபெத்தரபொலிஸ் நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போதே இந்த அபூர்வ ஊற்று கண்டறியப்பட்டது.

இந்த ஊற்றிலிருந்து ஒரு நிமிடத்திற்க 10,000  லீற்றர் நீர் தொடர்ச்சியாகக் கிடைக்கிறது. இதற்கு முன்னர் மன்னார் மடு பகுதியில் கண்டறியப்பட்ட நிமிடத்திற்கு 7,000 லீற்றர் என்பதே மிகப்பெரிய நீர் ஆதாரமாகக் கருதப்பட்டது.

    பாறை அடுக்குகளுக்கு இடையிலான வெடிப்புகளை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆய்வு செய்து, தென் மாகாண புவியியலாளர் இந்திரஜித் கமகே தலைமையிலான குழுவினர் இந்த இடத்தைத் துல்லியமாக அடையாளம் கண்டுள்ளனர்.


இந்த நீர் ஆதாரத்தைக் கொண்டு பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வை வழங்க நீர்வழங்கல் சபை திட்டமிட்டுள்ளது.

காலி – தெனியாய பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த ஊற்று, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட ஊற்றுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *