வெல்லம்பிட்டிய நவரத்ன ஜயவீர மாவத்தையில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் உம்மா ஜஸீமா நாஸீம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் K.J.M. பாடசாலை ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த விசேட இஃப்தார் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
 
கொலன்னாவ தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களின் பிரதான மௌலவிமார்களின் தலைமையில் நடைபெற்ற இந்நேழ்வின் அப்பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து இன மக்களும் இதில் பங்கேற்றனர்.
 
K.J.M. பாடசாலையின் நிறுவுனர் ஏ.ஆர்.எம். முதாஸிர் மற்றும் பள்ளிவாசல் தலைவர் அன்வர் லாபிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 1,500 பேர் வரை கலந்துகொண்டனர்.
 
இஃப்தார் நிகழ்வுக்கு இணையாக, இன மத பேதமின்றி அப்பிரதேசத்தைச் சேர்ந்த தேவையுடைய குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்த எரிவாயு அடுப்புகளை வழங்குவதற்கான அனுசரணையை அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை வழங்கியிருந்தது.
 
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இஃப்தார் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

video and news by sugath

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *