உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய திட்டங்களை வகுத்துள்ளது.
மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய, இந்தியாவிடம் இருந்து மேலதிக எரிபொருளைக் கொள்வனவு செய்ய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தேவைப்படின் சிங்கப்பூர் ஊடாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் ஆராயப்படுகின்றன.
வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.