நாட்டில் நிலவும் போஷாக்குக் குறைபாட்டை நீக்கும் நோக்கில் விநியோகிக்கப்படும் திரிபோஷா உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, 2026 ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் தொன் சோளத்தைஇறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான உயர்தர சோளத்தை போதியளவு பெற்றுக்கொள்ள முடியாமை மற்றும் உற்பத்திப் பாதிப்புகளைத் தவிர்க்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர்கள் இணைந்து, இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் மற்றும் தாவர அனுமதிப்பத்திரம் போன்ற நடைமுறைகளைத் தாமதமின்றிப் பூர்த்தி செய்ய விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த கூட்டுப் பத்திரத்திற்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இந்த இறக்குமதியின் மூலம் 2026 ஆம் ஆண்டு முழுவதும் திரிபோஷா உற்பத்திகள் எவ்விதத் தடையுமின்றி பொதுமக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.