நல்லிணக்கத்தை பறைசாற்றும் சுதந்திர தின விழா
கொகிலவத்த பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாட்டம்
நல்லிணக்கத்தின் விழுமியங்களை அர்த்தப்படுத்தும் வகையில், வெல்லாம்பிட்டிய – கொகிலவத்த பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்கள் கல்வி கற்கும் K.J.M பாடசாலையின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று காலை சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர்.
தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவ மாணவிகள் தேசியக் கொடியை ஏந்தியவாறு தேசபக்தி பாடல்களைப் பாடினர். அத்துடன் மாணவர்களின் உரைகள் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற்றன.
கொகிலவத்த K.J.M பாடசாலையின் நிறுவனர் ஏ.ஆர்.எம். முதாசிர் (A.R.M. Mudasir)அவர்கள் உட்படப் பல முக்கிய விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்த விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
NEWS/ VIDEO
SUGATH
COlOMBO