மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தாழங்குடா பகுதியைச் சேர்ந்த இவர் தொடர்பான சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனுடன், இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் மாவட்டத்தில் பதிவாகியுள்ள தற்கொலைச் சம்பவங்கள் 16 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை சமூகத்தில் பெரும் அதிர்ச்சியும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

மன அழுத்தம், தனிப்பட்ட பிரச்சினைகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவோர் உதவி கோருவது மிக அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
உதவி தேவைப்பட்டால் – “Sumithrayo” இலவச உதவி இலக்கம்: 1926 (24 மணி நேர சேவை).

நெருக்கடியில் இருப்பவர்கள் தனியாகச் சுமையெடுக்காமல், நம்பகமானவர்களிடம் அல்லது நிபுணர்களிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *