பல்கலை மாணவர்களுக்கு
மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 22ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில்  (13-06-2026) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளர் ஏ.எம்.ரழீம் , பிரபல பாடகர் அமீர்கான்,சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் அஸ்கர் மற்றும் ரிப்தி அலி ஆகியோர் கலந்து கொண்டதுடன் தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவன தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம், இணைப்பாளர்களான ஆகிப் மொஹமட் ,அர்கம் சுலைமான் மற்றும் பெற்றோர்
எனப் பலர் கலந்து னொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர்
புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எம்.ஐ. இகாசா பானு- புத்தளம்,ஜே.ஜி.எஸ்.துலாஞ்சலி -குருநாகல், ஏ.ஆர்.எப். ரம்லா- பொல்கஹவெல, ஆர். கிருதிகா -யட்டியாந்தோட்டை மற்றும் எம்.எம்.மின்னா -ஏறாவூர் ஆகியோருக்கு புரவலர் ஹாஷிம் உமருடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகள் மடி கணனிகளை வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *