Shezu Amazing Cake & HA Bridal Mehendi Academy மூலம் விருது வழங்கும் நிகழ்வு கிராண்ட்பாஸ் wedding zone திருமண மண்டபத்தில் இடம் பெற்றது.

இது வெறும் விருது வழங்கும் விழா மட்டுமல்ல; இது படைப்பாற்றல், அர்ப்பணிப்பு, திறமை மற்றும் உறுதியின் கொண்டாட்டமாகும்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக
திருமதி மரியம் ஹாசிம் ஓமர் — Hassim Omar Foundation செயலாளர். .
திருமதி ஷிராந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ — சமூக சேவையில் ஈடுபட்டுள்ள முன்னணி நபர், Carlten Pre-School நிறுவனத்தின் முதல்வரும் இயக்குநரும், திரு.செந்தில் வேலவர் தினகரன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர். ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்


Bridal Designing
Cake Making
Drawing Art
Henna Art
Bouquet Making
Craft Making
Baby Makeup காம்பெடிஷன் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் இன்று விருதுகள் வழங்கப்பட்டன.

Shezu Amazing Cake & HA Bridal Mehendi Academy நிறுவனர் திருமதி S. ஹிதாயா ஃபைஸ்.
ஒரு திறமையான தொழில்முனைவோரும் ஆவார்.

Cake artistry, bridal designing மற்றும் mehendi art துறைகளில் சிறந்து விளங்குகிறார்.

திறமையான முறையில் கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், சுயதொழில் மற்றும் பொருளாதார சுயநிலையை உருவாக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் சிறப்புரையினை தினகரன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் செந்தில் வேல் அவர்கள் ஆற்றினார்.

இவ்வாறான தொழில் முயற்சியாளர்களை குறிப்பாக பெண்களை ஊக்குவிப்பதானது மிகவும் முக்கிய அம்சமாகும்.

தினகரன் பத்திரிகை தொடர்ந்து இவ்வாறான ஊக்குவிக்கின்ற அனுசரணையினைய செய்து வருகிறது.

தலைநகரில் மட்டுமல்ல அதனை சூழ உள்ள பல்வேறு பிரதேசங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாங்கள் ஆதாரமும் அனுசரணையும் வழங்கி வருகிறோம் இந்த தொழில் முயற்சியானது நாட்டுக்கும், பிரதேசத்துக்கும் மிக முக்கியமானது என அவரது உரையில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *