நடிகர் மற்றும் இயக்குனர் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மார்ச் 19 அன்று வெளியான இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிப் பருவக் காதல், ஏமாற்றம் மற்றும் பிரேக்-அப் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இளமைக்காலக் கதையாக இது அமைந்துள்ளது.

இதுவரை உலகளவில் சுமார் ரூ. 40 கோடிவரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *