ஸ்மார்ட்குரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் (28.03.2026) கொழும்பு-13,வாசல வீதி, இலக்கம் 136 இல் அமைந்துள்ள மேற்படி நிலையத்தில் நிறுவனம் பணிப்பாளர் திருமதி மேனன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பௌண்டேசன் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும் மாணவர்களுக்கு கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.
இதன்போது கல்வி நிலைய தலைவர், அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெற்றோர் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
