எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாராந்தம் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது
ஏனைய 4 வேலை நாட்களிலும் வருகை தர வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை அந்தந்த நிறுவனத் தலைவர்களே தீர்மானிக்கலாம்.
தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறையைப் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.
அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.