அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்களின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நலன்புரி நன்மைகள் சபையின் விதிமுறைப்படி, பயனாளிகளின் பெயர் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயமாகும்.
இதுவரை 29 இலட்சத்து 93 ஆயிரத்து 558 நபர்கள் தமது தகவல்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களின் விபரங்களை உறுதிப்படுத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது.
இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் வரும் மார்ச் 28-ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளன.
கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் வீட்டிற்கு வரும்போது பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது:
1. 18 வயதுக்கு மேற்பட்டோரின் தேசிய அடையாள அட்டைகள்
2. கடந்த 3 மாதங்களுக்கான மின்சாரப் பட்டியல்கள்
3. காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வாகன உரிமைப்பத்திரங்கள்.
4. மருத்துவச் சான்றிதழ்கள்(இருப்பின்).
தகுதியுள்ள நபர்கள் எவ்விதத் தடையுமின்றி கொடுப்பனவுகளைப் பெறுவதை உறுதி செய்ய இந்த ஒத்துழைப்பு அவசியமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.