026 ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித் தலைவர் மிட்செல் சான்ட்னர், முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளார்.
இதன்படி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கியுள்ளது.
இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே அடையாத ஒரே அணியாகத் தென்னாபிரிக்கா (குரூப் 1 முதலிடம்) அரையிறுதிக்கு வந்துள்ளது.
மறுபுறம், நியூசிலாந்து (குரூப் 2 இரண்டாம் இடம்) தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, மார்ச் 8-ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முதல் அணியாகத் தகுதி பெறும்.