உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய மூன்றாவது லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாள அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்கொட்லாந்து அணி சார்பில் மிட்செல் ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி 71 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
தற்போது 171 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றியிலக்கை நோக்கி நேபாள அணி தனது துடுப்பாட்டத்தைத் தொடங்கவுள்ளது.