ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 20ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் அதன் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இன்று (14) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட விருந்தினராக சிரேஷ்ட ஒலி–ஒளி பரப்பாளர் யாக்கூப்
பிரபல இசை அமைப்பாளர் சுருதி பிரபா, நிறுவன பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர், மேமன் கவி, எழுத்தாளர் ராதா மேத்தா, ஊடகத் துறை அமைச்சின் புலனாய்வு அதிகாரி ஜிப்றியா இப்ராஹிம், தமிழன் பத்திரிகை செய்தி ஆசிரியர் ஜவுபர், சுயதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் சார்ந்த ஊடகவியலாளர் அப்சரா ஜெயவரதன, தென்கிழக்கு பல்கலைக்கழக ஊடக இணைப்பாளர் அமீர், ஊடகவியலாளர் சந்திரிக்கா நிரோஷன், அமைப்பாளர் அர்க்கம் சுலைமான், ஷாம் பூஸ்டர் பணிப்பாளர் பஸ்னா, tradersஉரிமையாளர் ரிகாஸா மஸாஹீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
