STS academy exhibition and graduation ceremony இன்று 8.02.2026 BMICH ல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும், இலங்கையின் பிரபல நடிகை நிரஞ்சனி சண்முகராஜா, சன் செராமிக் நிறுவனத்தின் பணிப்பாளர் பொரவையா பிள்ளை புஷ்பராஜ், டயர் சென்டர்,லோமி ராதாகிருஷ்னண், திருமதி பி. தீபா, ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
STS academy,யில் கல்வி பயின்ற canvas painting, sketch, colouring போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் விருதுகளை புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும்,விருது பெற்ற இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளி நிரஞ்சனி சண்முகராஜா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
STS academy யில் சித்திர துறையில் பாடநெறியை பூர்த்தி செய்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது..
இதில் பெற்றோர் குழந்தைகள், நலன் விரும்பிகள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்

photography by issam farook