46வது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டத்தின் கலாமித்ரா விருது விழா 30.01.2026 கொழும்பு 11 செட்டியார் தெரு கல்யான முருகன் மண்டபத்தில் ஸ்தாபகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலைஞர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இவ் அலை கலை வட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் கலை . இலக்கிய போட்டிகள் மேடையேற்றப்பட்டன.
அத்துடன் அலை கலை வட்டத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியாளர்களுக்கு விருதும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கபட்டதுடன்
கலை இலக்கியத்தின் பத்து துறைகளில் பிரசித்தமான படைப்பாளிகளுக்கு கலாமி்த்ரா விருதுகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேசன் ஸ்தாபகர் புரவலர் ஹாசீம் உமர் திருமதி மரியம் ஹாசீம் உமர். இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி பி. ஆறுமுகபாண்டியன், தலைவர் பாலாபகு குருப், சென்னை மற்றும் பி.கே.சரவனன் இயக்குநர் திருநெல்வேலி மெடிக்கல் ஹொஸ்பிட்டல் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் அலை கலைவட்டத்தின் குருந்திரைப்படம், பரதநாட்டியம், நடனம், கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டதுடன் அலை கலைவட்டத்தின் வருடாந்த இதழும் வெளியீட்டு வைக்கபட்டது.

செய்தி+ புகைப்படம்
அஷ்ரப் ஏ சமத்