2026 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்ச ஒருநாள் வருகை ஜனவரி 15 அன்று பதிவாகி, அன்றைய தினம் மட்டும் 10,483 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த நாடு இந்தியா (35,177) ஆகும். தொடர்ந்து ரஷ்யா (19,930), ஐக்கிய இராச்சியம் (19,893) மற்றும் ஜெர்மனி (12,822) ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *