கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டம் நடத்திய கலை இலக்கியப் போட்டித் தொடரின் இறுதி நிகழ்ச்சிகளான பாடல் போட்டி மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

இந் நிகழ்ச்சிகளுக்கு ரூபவாஹினியின் தமிழ் நிகழ்ச்சியின் முன்னாள் பணிப்பாளர் எம்.என்.ராஜா,சங்கீத ஆசிரியைகளான கலைஞானச்சுடர் சுபாஷினி பிரணவன், திருமதி பகவதி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஸ்ரீதேவி கணேசன் மற்றும் சி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பாடல் போட்டி யில் முதலாம் இடம் – செல்வி.சந்திரசேகரன் அபிமன்யா
இரண்டாம் இடம் – செல்வி. P. ஷாகவி
மூன்றாம் இடம் – செல்வன். மு. தனுஷ் ஆகியோரும்
.அறிவிப்பு போட்டியில்
முதலாம் இடம் – செல்வன். மாயழகு யதுர்ஷான்
இரண்டாம் இடம் – செல்வி. ரமேஷ் தனுஷா
ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வு குறித்த சில படங்களை இங்கே காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *