“சின்னக் குயில் – ஒரு சகாப்தம்”
தென்னிந்தியாவின் முன்னணி பாடகியும், பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் விருது பெற்றவருமான சின்னக் குயில் KS சித்ரா அவர்களின்
“சின்னக் குயில் – ஒரு சகாப்தம்” என்ற மாபெரும் இசை நிகழ்ச்சிக்கான Press Meet நேற்று (17ம் திகதி) கொழும்பு One Galle Face வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பிரம்மாண்டமான Live in Concert 2026 நிகழ்ச்சி,
எதிர்வரும் பெப்ரவரி 7ம் திகதி
சுகந்ததாச உல்லக அரங்கில் நடைபெறவுள்ளது.
பல்வேறு மொழிகளில் தனது இனிமையான குரலால் ரசிகர்களின் மனங்களை வென்ற சித்ராவின் இந்த இசை பயணம், ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ‘My Tickets’ மூலம் பெற்றுக்கொள்ளலாம்.