கோஹிலவத்தே கே.ஜே.எம். அறக்கட்டளை, ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த கோஹிலவத்தே பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரண பொருட்கள், காலணிகள் மற்றும் வவுச்சர்களை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகம் கலாச்சாரப் பிரிவின் தலைவர் அலி கெப்ரில் சாதே பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கோஹிலவத்தை கே.ஜே.எம். பாடசாலையில் பயிலும் சிங்களம், மற்றும் முஸ்லிம் மாணவர்களில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளில் சிறப்பு பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

சுமார் 400 குறைந்த வருமானம் கொண்ட மாணவர்கள் இந்த உதவிகளைப் பெற்றனர்.

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு இத்தகைய உதவிகள் செய்தமைக்கு பாராட்டுகளையும் ஈரானிய அமைப்பின் உறுப்பினர் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்திலும் இதுபோன்ற சேவைகள் தொடர வாழ்த்துத் தெரிவித்தார்.

வெல்லம்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது உணவு, உலர் உணவுகள், உபகரணங்கள், படகு சேவை மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமான சேவைகளை மேற்கொண்டதற்காகவும் கோஹிலவத்தே கே.ஜே.எம். அறக்கட்டளை பெறும் பங்களிப்பை செய்தமைக்கு அப்பிரதேச மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்..

 

photography by :R.M.SUGATH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *